"சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே" (அல்குர்ஆன்:17:81)

Monday, November 8, 2010

Posted: 08 Nov 2010 04:11 AM PST
PFI Rally in Kerala
20  மாநிலங்களில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனம்  கணக்கெடுப்பை நடத்தியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லி மும்பை கொல்கத்தா பெங்களுரு மற்றும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு நடந்துள்ளது . அதே சமயத்தில் குஜராத்தை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோன்றதொரு கணக்கெடுப்பு திருவனந்தபுறத்தில் உள்ள கறிமடம் காலனியில் நடைபெற்றது. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், "ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?' "நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?' போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிற 10 இந்தியா மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்படுகிறது . பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே , 130 பேர் சந்திக்கவேண்டிய இலக்கை அவர்கள் அடைய முடியவில்லை.
TNS  INDIA  என்ற இந்த நிறுவனத்தின் கிளைகள் புது டெல்லி மும்பை கொல்கத்தா சென்னை ஹைதராபாத் அஹ்மதாபாத்  லக்னோ பட்ன புனே மதுர நாக்பூர் பெங்களுரு கொச்சி லூதியான மற்றும் புபநேஷ்வரில் உள்ளது. எல்லா இடங்களிலும் முஸ்லிம்களை குறிவைத்து இவர்கள் அதிகம் வாழும் இடங்களில் மட்டும் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சுமார் ஆறாயிரம் பேரிடமிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
உலகம் மற்றும் இந்தியாவின் எதிர்கால போக்கை கணிக்க இந்த கணக்கெடுப்புகள் உதவும் என்று சொல்கிறது TNS. அதிகாரிகளின் முன் அனுமதி இன்றி இந்த நிறுவனம் இச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவருகிறது.
இதனை கண்டித்து பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா கேரளா சட்டப்பேரவையை நோக்கி பேரணியும் ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்தது .
இதில் அமெரிக்கா விற்கு எதிரான கண்டன கோஷங்களும் ஆர்ப்பாட்டங்களும் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது . இத்தகைய கணக்கெடுப்பின் மூலம்  இந்தியா மக்களை மதரீதியில் பிளவு படுத்த அமெரிக்க முயற்சித்து வருவதாக ஆர்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி கோஷங்களை எழுப்ப்பினர்.
அமெரிக்க சார்பில் கணக்கெடுப்பை நடத்திய TNS INDIA நிறுவனத்தை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.
கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்

No comments:

Post a Comment