"சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே" (அல்குர்ஆன்:17:81)

Wednesday, December 8, 2010

நீண்ட சோதனை நன்மைக்கான வழி...

நீண்ட சோதனை நன்மைக்கான வழி...


சோதனையின் போதுதான் ஒரு முஃமினிடமிருக்கும் விசுவாசம் புலப்ப டும். அவன் பிரார்த்தனையை அதிகரித்துக் கொண்டே செல்வான். பிரார்த்தனைகளுக்குரிய விளைவைக் காணமாட்டான். ஆனால், நிராசை அடைவதற்கான காரணங்கள் பலமடைந்தாலும் அவனது எதிர்பார்ப் பில் மாற்றம் நிகழாது.

அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது பொறுமை அல்லது விசுவாசம் தான். அவனது உள்ளம் எந்தளவு கட்டுப்படுகின்றது அல்லது பிரார்த்த னையை அதிகரிக்கின்றது என்பதைக் கொண்டுதான் அதன் பொறுமை யைப் பார்க்கலாம். அதனை வைத்துத்தான் அவனது நிலையைத் தீர்மா னிக்கலாம்.

தனது பிரார்த்தனைக்கான பதிலை அவசரமாக எதிர்பார்ப்பவனைப் பொறுத்தவரை அது அவசரமாகக் கிடைக்காவிட்டால் நிராசையுற்று விடுவான். இவன் பலவீனமான விசுவாசம் கொண்டவன். தனது பிரார்த்தனைக்கான விளைவு கிடைக்கப்பெறுவது தனது உரிமை என்று அவன் நினைக்கிறான். இவன் தனது வேலைக்கான கூலியைக் கேட் பவன் போன்றிருக்கிறான்.
யஃகூப் (அலை) அவர்களது கதையை நீங்கள் கேள்விப்படவில்லையா? ஏறக்குறைய 80 வருடங்கள் சோதனையை அனுபவித்தார்கள். யூஸுப் (அலை) அவர்களையும் புன்யாமீனையும் இழந்தார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்க்கை மாறவில்லை. "அவர்கள் அனைவரை யும் அல்லாஹ் என்னிடத்தில் கொண்டுவந்து தரலாம்..." (ஸூறா யூஸுப்)

அல்லாஹ் இக்கருத்தை இப்படிச் சொல்கிறான்: "உங்களுக்கு முன்னி ருந்தவர்களுக்கு வந்த சோதனை போல உங்களுக்கும் வராமல் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்ளலாமென்று நினைக்கிறீர்களா? அவர்கள் மிகக் கடுமையாக உசுப்பப்பட்டார்கள். தூதரும் அவரோடு விசுவாசம் கொண்டோரும் எப்போது அல்லாஹ்வின் வெற்றி கிடைக்கும் என்று கூட கேட்டனர். அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இல் லையா?" (ஸூறா பகரா: 214)

தூதரும் விசுவாசிகளும் இதனை நீண்ட சோதனையின் பின்னரும், விடிவு பற்றிய நம்பிக்கையீனம் அண்மித்தபோதுதான் கூறினார்கள் என்பது தெளிவான விடயம்.
நபியவர்கள் இதனை இப்படிச் சொல்கிறார்கள்:
"அடியான் அவசரப்படாதவரைக்கும் நல்ல நிலையிலேயே இருக்கி றான். அப்போது, அவசரப்படுதல் என்பது என்ன என்று வினவப்பட்டது. அதற்கவர்கள்: நான் பிரார்த்தித்தேன். என்றாலும், எனக்கு பதிலளிக்கப் படவில்லையே என்று அவன் கூறுவதாகும்" என்று கூறினார்கள்.

சோதனையின் காலத்தை நீண்டதாய்ப் பார்ப்பதனை விட்டும் அதனை மிகையாகப் பார்ப்பதை விட்டும், நிராசையடைவதை விட்டும் நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ சோதிக்கப் படுபவன். பொறுமை மற்றும் பிரார்த்தனையின் மூலம் நீ அடிமை என நிரூபிக்கின்றாய். சோதனை நீண்டு செல்லலாம். ஆனால், அவனது அருள் கிடைக்காது என நீ நம்பிக்கை இழந்துவிடாதே.
இமாம் இப்னுல் ஜௌஸி (றஹ்)

No comments:

Post a Comment